ரேஷன் அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அரசி, பருப்பு !
ரேஷன் அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரொனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக அனைத்து குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரணத்தொகை மற்றும் இலவச ரேஷன் பொருட்கள் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ரேஷன் அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவர்கள் அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 12 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் வழங்கப்படும் என்றும் இதன் மூலம் 4 ஆயிரத்து 22 மூன்றாம் பாலினத்தவர்கள் பயன்பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






