ஊரடங்கு உத்தரவின் போது கேங்காக வெளியே சுற்றிய புள்ளிங்கோ! போலீசாரிடம் மாட்டிக்கொண்டு பட்டபாடு!
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் சென்னை குறுக்குப்பேட்டையில் சாலையில் தேவையின்றி சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கி உறுதிமொழி ஏற்க வைத்தனர். அந்தப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அனாவசியமாக இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அவர்களிடம் தேவையில்லாமல் சாலையில் வலம் வர மாட்டோம் முக கவசம் அணிவோம் என்று உறுதிமொழி எடுக்க வைத்தனர்.






