ஒரு போன் கால் போதும்! உங்க வீடு தேடி வரும் காய்கறி ! அசத்தும் திருப்பூர்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா பாதிப்பு ஏற்படாமலிருக்க தனிமனித இடைவெளியை பின்பற்றும் விதமாக வீடுகளுக்கு சென்று காய்கறிகளை வழங்கும் திட்டம் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் விரும்பும் விலைகளில் இவற்றை வாங்கிக் கொள்ளும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

ஊரடங்கு அமல்படுத்திய முதல் நான்கு நாட்கள் தனிமனித இடைவெளியை முறையாக கடைபிடித்த மக்கள் அடுத்தடுத்த நாட்களில் அதனை கடைபிடிக்க தவறினர். இதையடுத்து வீடுகளுக்கு சென்று காய்கறிகளை வினியோகம் செய்யும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தொடங்கிவைத்தார்.

 

திருப்பூர் மாநகர் பகுதியில் உள்ள 60 வார்டுகளை 13 மண்டலங்களாக பிரித்து ஒரு மண்டலத்திற்கு ஒருவர் என 13 வாகனங்களை கொண்டு காய்கறிகள் வினியோகம் செய்யப்படுகின்றன.

 

திருப்பூர் மாநகரில் எந்த பகுதியில் வசிக்கிறார்களோ அந்த பகுதிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொடர்பு எண்ணிற்கு அழைத்து ஒரு நாளைக்கு முன்னதாகவே தெரிவித்த விட்டால் அவர்கள் கேட்கும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பை வீடுகளுக்கே சென்று கொடுக்கின்றனர்.

 

ஒவ்வொரு பகுதியில் இருக்கும் எந்த நபர் காய்கறி கொண்டு வருகிறார், அவரின் தொலைபேசி எண், காய்கறி கொண்டு வரும் வாகனம் என அனைத்து தகவல்களும் மாவட்ட ஆட்சியரின் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


Leave a Reply