தேனியில் கொரொனா பாதித்த பகுதிகளில் நடந்து வரும் சுகாதார பணி!
தேனி மாவட்டத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்த பகுதிகளில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேனி மாவட்டத்தில் 21 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 21 பேரும் எந்தெந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் எனில் போடிநாயக்கனூர், சின்னமனூர் உத்தமபாளையம், பெரியகுளம், தேனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 21 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவர்கள் கிட்டத்தட்ட 13 இடங்களில் வசித்துள்ளனர். இந்த பகுதிகள் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதி முழுவதிலும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு வருகின்றன.
வீட்டில் யாருக்கேனும் காய்ச்சல், தலைவலி, இருமல் அல்லது ஏதேனும் உள்ளதா என்றும் வீட்டில் முதியவர்கள் யாரேனும் உள்ளனரா என்பது குறித்தும் அது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நீரிழிவு, பிரஸர் போன்ற நோய்கள் குறித்து ஏதேனும் மருந்துகள் தேவைப்படுகிறதா என்பது குறித்தும் அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.
அவர்கள் தங்கியிருந்த 21 பகுதிகளும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவைப்படும் பொருள்கள் அனைத்தும் ஒவ்வொரு வீடுகளுக்கும், மளிகைப் பொருட்கள் டெலிவரி செய்து தரப்படுகிறது. மேலும் இந்த பகுதியில் உள்ள 50 வீடுகளுக்கு ஒரு அங்கன்வாடி பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அந்த பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று ஏதேனும் காய்ச்சல், தலைவலி உள்ளதா என்பது குறித்து விசாரித்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.






