தமிழகத்தில் இன்றும் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு..! உயிரிழப்பும் 3 ஆக உயர்வு!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தமிழகத்தில் இன்றும் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் விழுப்புரம் மற்றும் தேனியில் 2 பேர் கொரோவுக்கு உயிரிழந்த நிலையில் தமிழகத்தில் பலி எண்ணிக்கையும் 3 ஆக அதிகரித்துள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மேலும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. நேற்று வரை பாதிப்பு எண்ணிக்கை 411 ஆகவும் உயிரிழப்பு ஒன்று ஆகவும் இருந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

 

அவர் இன்று செய்தியாள்களிடம் கூறுகையில், தமிழகத்தில் இன்று 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டு மொத்த எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது. இதில் 422 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். தமிழகத்தின் 31 மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் இவர்கள் சிசிச்சை பெற்று வருகின்றனர். இதில் 7 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இன்று விழுப்புரத்தில் 51 வயது ஆண் ஒருவரும், தேனியில் 53 வயது பெண் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர். விழுப்புரத்தில் உயிரிழந்த நபர் மற்றும் தேனியில் உயிரிழந்த பெண்ணின் கணவர் ஆகியோரும் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் ஆவர். தேனி நபரும் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருடைய மனைவிக்கும் கொரோனா வைரஸ் பரவி உயிரிழந்துள்ளார் என சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் கடந்த 13 நாட்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த நபர் கொரோனாவுக்கு முதல் பலியானார்.இந்நிலையில் இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply