கொரொனாவுக்கு மலேரியா மருந்து பலன் தராது…ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்தும்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா நோயாளிகளுக்கு மலேரியா எதிர்ப்பு மருந்துகளை கொடுத்தால் ஹார்ட் அட்டாக் உள்ளிட்ட ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க இதயநோய் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

 

மருத்துவ பல்கலைகழகம் மற்றும் இந்தியானா பல்கலைகழகத்தை சேர்ந்த நிபுணர்கள் கொரொனா நோயாளிகளுக்கு மலேரியா மருந்தை பரிந்துரைக்கும் போது நோயாளிகளின் இதய செயல்பாட்டை கண்காணிப்பது அவசியம் என கூறியுள்ளனர்.

 

ஹைட்ராக்ஸிக் கிலோராக்குவின், அசித்ரோமைசின் போன்ற மருந்துகளை கொடுத்தால் நோயாளிகளின் இதய துடிப்பு விரைவாகவும், தாறுமாறாகத் துடிக்க தொடங்கி மாரடைப்பில் கொண்டு சேர்த்துவிடும் என அவர்கள் அபாய சங்கு ஊதியுள்ளனர்.


Leave a Reply