கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கான சிகிச்சைகளை மறுக்கக்கூடாது!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


மகப்பேறு உள்ளிட்ட அத்தியாவசிய சிகிச்சைகள் செய்ய தனியார் மருத்துவமனைகள் மறுக்கக் கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரொனா முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

மகப்பேறு, குழந்தைகளுக்கான சிகிச்சை, டயாலிசிஸ், புற்றுநோய்க்கு அளிக்கப்படும் கீமோதெரபி, நரம்பியல் சிகிச்சை ஆகிய அத்தியாவசிய சிகிச்சைகளை கட்டாயம் அளிக்க வேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது. இதை கடைப்பிடிக்காத தனியார் மருத்துவமனைகளில் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.


Leave a Reply