மார்ச் 24-ல் டெல்லி டூ சென்னை வந்த 2 விமானங்களில் பயணித்தவர்கள் ஜாக்கிரதையாக தனிமைப்படுத்திக் கொள்ளவும்..! சென்னை மாநகராட்சி அவசர அறிவுறுத்தல்!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கடந்த மார்ச் 24ந் தேதி டெல்லியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ மற்றும் ஏர் ஆசியா விமானங்களில் பயணித்தவர்களுக்கு கொரோனா தொற்று பரவியிருக்க வாய்ப்புள்ளதாகவும், எனவே இரு விமானங்களில் பயணித்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம் என சென்னை மாநகராட்சி அறிவுறித்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்யாது.

 

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக இந்தியாவில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல் பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரஸ் எந்த வழியில் யார்? யாருக்கு பரவி வருகிறது என்பது பற்றிய தகவல்கள், பாதிக்கப்பட்டோர் மூலம் அடுத்தடுத்து தெரிய வருகிறது.

 

இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மார்ச் 24-ந் தேதி காலை 6 மணிக்கு டெல்லியிலிருந்து சென்னை வந்த இண்டிகோ விமானம் மற்றும் அதே நாள் இரவு 9.30 மணிக்கு சென்னை வந்த ஏர் ஆசியா விமானம் ஆகியவற்றில் பயணித்தவர்கள் தங்களை 28 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.

 

சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவ சோதனைக்கு ஆட்படுத்திக் கொள்ள வேண்டியதும் அவசியம் என சென்னை மாநகராட்சி அறிவுரை வழங்கியுள்ளது. சம்பந்தப்பட்ட இரு விமானங்களில் பயணித்த சில பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சென்னை மாநகராட்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply