ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கும் மக்களுக்கு பரிசு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


திண்டுக்கல்லில் வீட்டை விட்டு வெளியேறாமல் ஊரடங்கை கடைபிடிக்கும் மக்களுக்கு ஃப்ரிட்ஜ், பீரோ உள்ளிட்ட பரிசு பொருட்கள் மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் மக்கள் அவசியமில்லாமல் வெளியே வருவதை தடுக்க மாநகராட்சி சார்பில் 2,500 ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள், 2000ரூபாய் வீட்டிலேயே வழங்க உள்ளதாகவும் அவ்வாறு வீட்டிலிருந்தபடியே வாங்குவோருக்கு கூப்பன் வழங்கப்பட்டு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Leave a Reply