மருத்துவரின் கர்ப்பிணி மனைவிக்கும் கொரோனா தொற்று

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவருக்கு கொரொனா உறுதியான நிலையில் அவரது ஒன்பது மாத கர்ப்பிணி மனைவிக்கும் கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றியவருக்கு கொரொனா அறிகுறி தென்பட்டது.

 

இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவசரகால பணிக்காக அவரது மனைவி பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 9 மாத கர்ப்பிணியான அவரது மனைவிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதையடுத்து இருவருக்கும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது மனைவிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரசவம் நடைபெறும் என்றும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கடைபிடித்தே பிரசவம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply