உத்தரப் பிரதேசத்தில் இன்று ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா தொற்று!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


உத்திரபிரதேச மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 172 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதில் 42 பேர் தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று அம்மாநில அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதற்கிடையே தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பாதுகாப்பு வழங்கவும் பெண் சுகாதார பணியாளர்கள் மற்றும் பெண் காவலர்கள் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்று உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.

 

தப்லீக்கின் பங்கேற்பாளர்கள் செவிலியர்களோடு தவறாக நடந்து கொண்டதாக காசியாபாத் மருத்துவமனை ஊழியர்கள் புகார் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேசத்தில் பொருத்தவரை 285 பேர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.


Leave a Reply