கடையில் ஆள் இல்லை! பணத்தை கல்லாவில் போட்டுவிட்டு பிரட்டை எடுத்து செல்லும் மக்கள்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கோவையில் ஆளில்லாத பேக்கரி கடையில் கல்லா பெட்டியில் பணத்தைப் போட்டுவிட்டு வாடிக்கையாளர்கள் எடுத்து செல்லும் காட்சி வியப்பை ஏற்படுத்தி வருகிறது. முதியவர்கள், நோயாளிகள் தனியே அறை எடுத்து தங்கி இருக்கும் பேச்சுலர்களுக்கு பிரட்டுகள் துரித உணவாக அமைகின்றன.

 

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பிரட் கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு உதவும் விதமாக கோபுரத்தில் உள்ள நெல்லை முத்துவிழா ஸ்வீட் கடை உரிமையாளர் இந்த நூதன முயற்சியில் இறங்கியுள்ளார். ஒரு பிரட் பாக்கெட் மொத்தம் முப்பது ரூபாய் என விலை நிர்ணயித்தார்.

 

உரிமையாளர் அங்குள்ள கல்லாப்பெட்டியில் பணத்தை போட்டு விட்டு பிரட்டி எடுத்து செல்லலாம் என எழுதி வைத்துள்ளார். அதன்படி வாடிக்கையாளர்களும் பணத்தைப் போட்டுவிட்டு பிரட்டை எடுத்து செல்கின்றனர்.


Leave a Reply