போலீசாரின் டிரோன் கேமரா! தெறித்து ஓடும் மக்கள்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கன்னியாகுமரியில் ஊரடங்கு உத்தரவை மீறுவோரை கண்காணிப்பதற்காக டிரோன் கேமராவை போலீசார் பறக்க விட்ட நிலையில் பொதுமக்கள் அதனை கண்டு தங்கள் வீடுகளுக்குள் ஓட்டம் பிடித்தனர். கொரொனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

 

பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் நான்கு பேருக்கு மேல் கூட்டம் கூட்டமாக கூட கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் பொது இடங்களில் மக்கள் கூட்டம் கொண்டவராகவும் கடற்கரைகளில் மக்கள் கூடியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

 

இதனையடுத்து குமரி மாவட்ட போலீசார் டிரோன் கேமராவை பறக்கவிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பொது இடங்களிலும், கடற்கரையோரங்களில் கூட்டம் கூட்டமாக இருந்த மக்கள் டிரோன் கேமராவை கண்டவுடன் அங்குமிங்குமாக அலறியடித்து தங்களது வீடுகளுக்குள் ஓடினர். இதனிடையே தற்போது அதற்கான காட்சிகள் வெளியாகியுள்ளது.


Leave a Reply