ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க ஜூன் வரை கால அவகாசம்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் காலாவதியாகும் ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன அனுமதி புதுப்பித்தல் ஆவணங்கள் ஜூன் 30 வரை செல்லும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் தினக் கூலிகள், விவசாயக் கூலிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், டாக்சி ஓட்டுனர்கள், கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

 

போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை மற்றும் ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் போன்ற பணிகளை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனத்தின் ஆவணங்கள் ஜூன் 30 வரை செல்லும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

உரிமம் முடிந்த வாகனங்களுக்கான அனுமதி ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை புதுப்பிக்க ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


Leave a Reply