ஊரடங்கு உத்தரவை மீறியதால் தாக்கப்பட்ட நபரிடம் மன்னிப்பு கேட்ட காவலர்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சென்னை மாதவரம் அருகே ஊரடங்கு உத்தரவை மீறியதாக தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநரிடம் காவலர் மன்னிப்பு கோரினார். புளியந்தோப்பு தேசிய நெடுஞ்சாலையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக தடுத்து நிறுத்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மூர்த்தியை அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் நித்தியானந்தம், குமரேசன் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

இந்தநிலையில் மூர்த்தியை காவலர் நித்தியானந்தம் கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்தநிலையில் மூர்த்தியை நேரில் சந்தித்து காவலர் நித்யானந்தா மன்னிப்பு கேட்டார். மேலும் காவலர் நித்தியானந்தம் தனக்கு 14 வருட நண்பர் என்றும் மக்கள் நலனுக்காகவே தன்னை அவர் தாக்கியதாகவும் மூர்த்தி தெரிவித்தார்.

 

பின்னர் மூர்த்திக்கு காவல்துறை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி கிருமிநாசினி வழங்கி கொரொனா குறித்த அறிவுரைகளை வழங்கினார்.


Leave a Reply