துப்புரவுத் தொழிலாளரைப் பாராட்டிப் பூ தூவி பொழிந்த பொதுமக்கள்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Arrangemets


பஞ்சாபி நாவா நகரில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் துப்புரவு தொழிலாளர் மீது பூவை பொழிந்து பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர். கொரொனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் பதினான்காம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

 

வெளியே சென்றால் கொரொனா தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் வீடுகளுக்குள் முடக்கியுள்ளனர். இந்த சூழ்நிலையிலும் துப்புரவு தொழிலாளர்கள் தெருத்தெருவாக சென்று சாலைகளை பெருக்கித் தூய்மை செய்வதுடன் கழிவுகளை சேகரித்து அகற்றி வருகின்றனர்.

 

பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தில் நாவா எனும் நகரில் இவ்வாறு தூய்மை பணி மேற்கொண்டால் துப்புரவு தொழிலாளர் மீது மக்கள் பூமாரி பொழிந்து பாராட்டினர்.


Leave a Reply