காவல் உதவி ஆய்வாளர் மீது காரை மோதி விபத்து
தர்மபுரி அருகே 144 தடை உத்தரவை மீறி வலம் வந்தவர்களை வழிமறித்த காவல் உதவி ஆய்வாளர் மீது காரை மோதி விபத்து ஏற்படுத்தியவரை போலீசார் கைது செய்தனர். வெள்ளிச்சந்தை அருகே பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சாரதி என்பவர் அவ்வழியே வந்த கார் ஒன்று சோதனை செய்வதற்காக வழிமறித்து உள்ளார்.
ஆனால் காரை நிறுத்தாத ஓட்டுனர் உதவி ஆய்வாளர் சாரதி மீது மோதிவிட்டு அதிவேகத்துடன் அங்கிருந்து தப்பி உள்ளார். இதையடுத்து சக காவலர்கள் காரை துரத்தி சென்ற நிலையில் பொதுமக்கள் உதவியுடன் கார் மடக்கி பிடிக்கப்பட்டது.
காரில் இருந்த 3 பேர் தப்பி ஓடிய நிலையில் காரை ஓட்டி வந்த பழனி என்பவர் கைது செய்யப்பட்டார். கார் மோதி பலத்த காயமடைந்த உதவி ஆய்வாளர் சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.






