கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா பரவுமா…?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கோழி இறைச்சி உண்பதால் கொரொனா வைரஸ் பரவும் என்ற தகவல் உண்மையில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கொரொனா தொற்று பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் கோழி இறைச்சி அல்லது முட்டையை உண்பதால் கொரொனா வைரஸ் பரவும் என சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டது. இதனால் மக்கள் கோழி சார்ந்த உணவுகளை சாப்பிட தயக்கம் காட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதன்காரணமாக கோழி வளர்ப்பு தொழிலில் உள்ளவர்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருவதாகவும் கால்நடை பராமரிப்பு துறை தெரிவித்துள்ளது. கோழி இறைச்சி சாப்பிடுவதால் கொரொனா பரவியதற்கு எவ்வித மருத்துவ ஆதாரங்களும் இல்லை என்று மக்கள் தயக்கமின்றி முட்டைகளையும், கோழி இறைச்சியையும் உண்ணலாம் என்றும் கால்நடை பராமரிப்புத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.


Leave a Reply