கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடம் பிடித்துள்ள தமிழ்நாடு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


இந்தியாவில் கொரொனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை ஆயிரத்து 397 பேர் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதில் 124 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் 35 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரொனா பாதிப்புள்ள மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய சோகம் நிகழ்ந்துள்ளது.

 

அதன்படி முதல் இடத்தில் உள்ள கேரளாவில் 234 பேரும், இரண்டாவது இடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் 216 பேரும், தமிழகத்தில் 124 பேரும் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Leave a Reply