--- --:--:-- --

திருப்பூர் சக்தி நகர் பகுதியில் கொரோனா நிவாரண உதவி தொகைக்கான டோக்கன் வழங்கிய ஆளும் கட்சியினர்..!! குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே வழங்கியதால் சர்ச்சை!!

sfasff

திருப்பூர் செட்டிபாளையம் சொசைட்டிக்கு உட்பட்ட போயம்பாளையம் சக்திநகர் பகுதியிலுள்ள தொட்டிபாளையம் ரேசன் கடைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் நிவாரண உதவி தொகை வழங்க, ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே டோக்கன்களை வழங்கியதால் சர்ச்சை எழுந்தது. இதனால் அவசரம் அவசரமாக அந்த டோக்கன்களை திரும்ப வாங்க அதிகாரிகள் உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

கொரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் மாா்ச் 25 முதல் ஏப்ரல் 14 -ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு தமிழக அரசால் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.1,000 நிவாரணமாக வழங்கப்படும் என்றும், ஏப்ரல் மாதத்திற்கான ரேசன் பொருட்களும் இலவசமாக ஏப்ரல் 2ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளன.

 

இதன்படி, திருப்பூா் மாவட்டத்தில் நடைமுறையிலுள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் நிவாரண உதவித்தொகை பெறுவதற்கான டோக்கன்கள் மாா்ச் 31, ஏப்ரல் 1ஆம் தேதிகளில் வீடுவீடாக சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடை விற்பனையாளா்கள் மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி, நேரத்தில் நியாயவிலைக் கடைக்கு சென்று நிவாரணத் தொகை, அத்தியாவசியப் பொருள்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது .

புதிதாக வழங்கப்பட்ட டோக்கன்
புதிதாக வழங்கப்பட்ட டோக்கன்

இந்நிலையில், திருப்பூர் வடக்கு செட்டிபாளையம் சொசைட்டிக்கு உட்பட்ட சக்திநகர் பகுதியிலுள்ள தொட்டிபாளையம் ரேசன் கடைக்கு உட்பட்ட கணபதி நகர், சக்தி நகர், போயம்பாளையம் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) விதிகளை மீறி ஆளும் கட்சியினர் தன்னிச்சையாக தயாரித்த டோக்கன்களை, ஆளும் கட்சியைச் சேர்ந்த நபர்களுக்கு மட்டுமே வழங்கியதாக தெரிகிறது.

 

இதனால், இப்பகுதி பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவியது. இது குறித்து திருப்பூர் வடக்கு குடியுரிமை தாசில்தார் தமிழ்ச்செல்வனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால்,உடனடியாக சம்பந்தப்பட்ட சக்திநகர் ரேசன் கடை விற்பனையாளரை தொடர்பு கொண்டு ஆளும் கட்சினர் தன்னிச்சையாக ஒரு தரப்பினருக்கு வழங்கிய கொரோனா வைரஸ் நிவாரண உதவி தொகை டோக்கன்கள் அனைத்தையும் உடனடியாக பொது மக்களிடம் இருந்து திருப்பி வாங்கி விட்டு தமிழக அரசு உத்தரவுப்படி புதிதாக டோக்கன் தயார் செய்து ரேசன் கடை விற்பனையாளர் மட்டுமே நேரில் சென்று பொது மக்கள் வீடுகளில் வழங்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டார்.

 

அதன்படி, இன்று காலை 6 மணி முதல் இப்பகுதியில் நேற்று ஆளும் கட்சியினர் வழங்கிய டோக்கன்களை அவசர அவசரமாக பொது மக்களிடம் இருந்து ரேசன் கடை விற்பனையாளர் திரும்ப வாங்கும் பணியில் ஈடுபட்டார். இதனால் விற்பனையாளருக்கும் பொது மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் புதிதாக டோக்கன் வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டதால் பொது மக்கள் கலைந்து சென்றனர். அதனைத் தொடர்ந்து புதிதாக டோக்கன்கள் வழங்கப்பட்டது.

 

இந்நிலையில், திருப்பூரில் விதிமுறைகளை மீறி டோக்கன் வழங்கிய ஆளும் கட்சியினர் மீது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon