அவசரப் பயணத்திற்கு யாரிடம் அனுமதி பெற வேண்டும்…?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


அவசர பயணம், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்காக ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்ல தாசில்தார் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவசர பயணத்திற்காக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல யார் யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

 

அதில் இறப்பு, சிகிச்சை, திருமணத்திற்காக ஒரு மாவட்டத்திற்கு உள்ளேயே பயணிக்க அந்தந்த தாசில்தாரிடம் அனுமதி பெறலாம். ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்வதற்கான அனுமதி சீட்டை அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் பெற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் இனி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் அனுமதி சீட்டு பெற வேண்டும். காவல்துறை சார்பில் வழங்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி துணை ஆணையரை அனுப்பி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

 

அங்கு சமூக விலைகளை கடை பிடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை மக்கள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Leave a Reply