தினக்கூலிக்கு செல்லும் மக்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் — கவுண்டம்பாளையம் பா.ஜ.க சார்பில் வழங்கப்பட்டது !!!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1347 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.கொரனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். இதனால் தொழிலாளர்கள், விவசாயிகள், தினகூ லிக்கு செல்வோர் என அதிகளவில் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர்.

இச்சூழலில் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட ஏழை , எளிய மக்கள் தினக்கூலிக்கு சென்று தங்களது அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது வேலைகள் இல்லாமல் திண்டாடி வருவதை அறிந்த கோலம் பவுண்டேஷன் மற்றும் கவுண்டம்பாளையம் பா.ஜ.க மண்டலம் சார்பில் டாக்டர் பிரீத்தி மக்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை சுமார் 500க்கும் மேற்பட்டோர்க்கு வழங்கினார்.

இதில் ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு வட்டத்தில் நின்று பொருட்களை மக்கள் வாங்கி சென்றனர்.






