ஸ்பானிஷ் ஃப்ளூ காய்ச்சலுக்கே தப்பிய மூதாட்டி கொரோனாவால் உயிரிழப்பு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


இரண்டு உலகப் போர்களிலும் ஸ்பானிஷ் ப்ளூக்கும் தப்பிய 108 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். லண்டனில் வசித்து வந்த 108 வயது மூதாட்டி கடந்த செவ்வாய்க்கிழமை லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.

 

அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் 24 மணி நேரத்திலேயே உயிரிழந்தார். 1918 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் ஸ்பானிஷ் ப்ளூ பரவிய நிலையில் அவரின் சகோதரி உயிரிழந்தார்.

 

அதிலிருந்து தப்பிய அந்த மூதாட்டி வருகிறாய் ஐந்தாம் தேதி தனது 109வது பிறந்தநாளை கொண்டாட இருந்தார். கொரொனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் அந்த மூதாட்டி தான் அதிக வயது உடையவர் ஆவார்.


Leave a Reply