ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு பிரதமர் மோடி பாராட்டு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா பாதிப்புகளிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தை காக்க ரிசர்வ் வங்கி மிகப்பெரிய நடவடிக்கை எடுத்திருப்பதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளால் நாட்டில் பணப்புழக்கம் அதிகரிப்பதோடு கடன்களுக்கான வட்டி குறையும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

இதனால் நடுத்தர வர்க்கத்தினரும், தொழில் துறையினரும் பயன்பெறுவார்கள் என்றும் பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு மிகத் துணிச்சலான என்றும் கொரொனா பாதிப்புகளில் இருந்து மீள இது உதவிகரமாக இருக்கும் என்றும் வங்கியாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

நடுத்தர மற்றும் தொழில் துறையினர் எவற்றை எதிர்பார்த்தனரோ அவற்றை ரிசர்வ் வங்கி பூர்த்தி செய்து விட்டதாகவும் அவர்கள் கூறினர்.


Leave a Reply