இனி காவல்துறையினர் கையில் லத்தி வைத்திருக்க கூடாது!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஊரடங்கு உத்தரவை ஒட்டி பாதுகாப்பு மற்றும் சோதனைகளில் ஈடுபட்டுள்ள காவலர்கள் கையில் லத்தி வைத்திருக்கக் கூடாது என்று சென்னை பூக்கடை சரகம் காவல்துறை துணை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாட்ஸ்அப் ஆடியோவில் வீடுகளை விட்டு வெளியே வரும் பொதுமக்களுக்கு வீட்டுக்குள்ளேயே இருப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

 

அதைவிடுத்து அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை கொண்டு தாக்குதலையும் தவிர்க்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். மேலும் அத்தியாவசிய தேவைகள் மற்றும் அத்தியாவசியமற்ற தேவைகள் குறித்து காவலர்கள் நன்கு புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply