--- --:--:-- --

கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

9

கேரளாவில் மேலும் 19 பேருக்கு கொரொனா பரவியுள்ளதால் அம்மாநிலத்தில் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 138 ஆக அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கேரளா வந்த மேலும் 19 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் கேரளாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 830 ஆக உயர்ந்துள்ளது என்று அவர் கூறினார்.

 

கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் குணம் அடைந்து விட்டதாகவும் அவர்களுக்கு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon