--- --:--:-- --

144 தடை உத்தரவினையும் மீறி சாலையில் உலா வந்தவர்கள் காவல் துறையினருடன் வாக்குவாதம் !!!

1

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும்,இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இந்த நிலையில் கொரோனா வைரஸ் மூலம் சமூக பரவலை தடுக்கும் பொருட்டு இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.மூன்றாவது நாளான இன்றும் பொதுமக்கள் ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்.

 

இருந்தும் திருந்தா ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் என்ற முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பாடல் வரிகளுக்கு ஏற்றாற்போல பொதுமக்களில் ஒரு சிலர் அத்தியாவசிய தேவைகளுக்காக சாலைகளில் வருகின்றனர்.அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி முறையான விசாரணைக்கு பின்னர் அனுமதித்து வருகின்றனர்.

அதில் ஒரு சிலர் மத்திய,மாநில அரசுகளின் 144 தடை உத்தரவினை மீறி சாலைகளில் உலா வருகின்றனர்.அவர்களை தடுத்து நிறுத்தும் காவல் துறை அதிகாரிகளிடம் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் மக்களின் உயிரை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினருடன் ஒரு சிலர் வாக்குவாதத்தில் ஈடுபடுவது அவர்களுக்கு மேலும் பணிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது.

 

சவாலான பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினருக்கு இது போன்ற ஒரு சிலரால் கடும் மன உளைச்சலும் ஏற்பட்டு வருகிறது.இதனை தடுக்கும் பொருட்டு காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon