நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க தனி சட்டம்…! ஆசிரியர் நல கூட்டமைப்பு வரவேற்பு!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உள் ஒதுக்கீட்டிற்கு தனி சட்டம் கொண்டு வரப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் அறிவிப்புக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

 

இது தொடர்பாக இந்த கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் நிறுவனத் தலைவர் சா. அருணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று தமிழக முதலமைச்சர் அவர்கள் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகள் நகராட்சிப் பள்ளிகள் , மாநகராட்சி பள்ளிகள் , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடினர் நலப் பள்ளிகள் வனத்துறை பள்ளிகள் ,சீர் மரபினர் பள்ளிகள் ஆகிய அரசுப்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயின்று மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்ய புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்றும், இது குறித்து ஆராய உயர் நீதிமன்ற நீதியரசரை கொண்டு ஆணையம் அமைக்கப்படும் என்றும் இதில் உறுப்பினர்களாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், குடும்பநலத் துறை செயலாளர், சட்டத்துறை செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வி துறையால் பரிந்துரை செய்யப்படும் இரண்டு கல்வியாளர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்றும் மேலும்,அதே போன்று இந்த ஆணையம் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி குறைவாக இருப்பதையும் அவர்களின் பொருளாதாரத்தையும் சூழ்நிலையும் கண்டறிந்து ஒரு மாதத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிப்பார்கள் என்று இன்று (21.03.2020 ) சட்டப்பேரவையில் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

 

நீட் தேர்வில் பாதிக்கப்படுவது அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே, அதற்கு காரணம் என்னவென்றால் பொருளாதாரம் பெற்றோர்களின் ஏழ்மை நிலை தான். பெற்றோர்கள் தினக் கூலிகளாகத்தான் இருக்கின்றனர். ஒருநாள் வேலைக்கு செல்லவில்லை என்றால் அன்றைய தினம் அவர்கள் நிலை கேள்விக்குறியே . ஒருசில மாணவர்கள் தந்தையை இழந்திருப்பர்;ஒருசில மாணவர்கள் தாயை இழந்திருப்பார்கள்; ஒருசில மாணவர்கள் இருவரையும் இழந்து உறவினர் வீட்டிலும் விடுதிகளிலும் தங்கிப்படிப்பார்கள். இந்த சூழ்நிலையில் தான் அரசு பள்ளி மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

 

தனியார் பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் அப்படியில்லை; பள்ளி மற்றும் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கே பல லட்சம் ரூபாய் செலவு செய்து தன் குழந்தைகளை சேர்க்கின்றனர். அது மட்டுமல்லாமல் பள்ளியில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு நடத்தி சேர்க்கின்றனர். ஒருசில பள்ளிகளில் பெற்றோர்களுக்கே தேர்வு நடத்தி அவர்களும் தேர்ச்சி பெற்றால் தான் பள்ளியில் சேருவதற்கு வாய்ப்பு கிடைக்க ஒதிக்கீடு வழங்குகின்றனர். இதனால் தான் நீட் தேர்வில் தனியார் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்று மருத்துவக்கல்லூரியில் வாய்ப்பு கிடைக்கிறது.

 

இப்படி இருக்கும் பட்சத்தில் தான் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியவில்லை , தமிழக அரசு நன்கு அறிந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீட்டிற்கு தனி சட்டமென அறிவித்திருப்பதை வரவேற்று பாராட்டுகிறேன், இன்னும் முழுமையாக பயன்பெற வேண்டுமானால் நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் எனபதை 110 விதியின் கீழ் அறிவித்த தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என சா.அருணன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Leave a Reply