கொரோனா பெண்களைவிட ஆண்களை அதிகம் பாதிக்கிறதா?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


2003 ஆம் ஆண்டில் சார்ஸ் நோய்க்கு சீனா மற்றும் ஹாங்காங் 274 பேர் உயிரிழந்தனர். எனினும் தற்போது பரவி வரும் புதிய கொரொனா வைரசையும் ஒப்பிட்டு தைவானில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தைவானில் 2003 ஆம் ஆண்டில் ஏப்ரல் 25 முதல் மே 19 ஆம் தேதி வரை சார்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இதேபோல ஜனவரி 31 ஆம் தேதி வரை புதிய கொரொனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளனர்.

 

இதில் சார்ஸ் நோய்க்கு ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும், பாதிக்கப்பட்ட ஆண் பெண் விகிதம் 0.5 2 : 1 என்ற அளவில் இருந்ததாகவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. உகானில் கொரொனா வைரஸ் பரவத் தொடங்கியபோது இந்த விகிதம் 1.3:1 என இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சார்ஸ் பெண்களை அதிகம் பாதித்த நிலையில், புதிய covid -19 ஆண்களை அதிகம் பாதிப்பது தங்களது விவரங்களில் தெரியவந்திருப்பதாக ஆய்வை மேற்கொள்ள யூ ஜாங்க்ஸோ மற்றும் எங்க்ஸன் லாய் தெரிவித்துள்ளனர்.

சிறுவர்கள் முதியவர்களை விட இளைஞர்களே சார்ஸ் நோயால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களாக இருந்தனர் என்றும் சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களோடு ஒப்பிடும்போது covid -19 நோயால் பாதிக்கப்படுபவர்கள் சுமார் இருபது வயது அதிகம் உள்ளவர்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.இருப்பினும் புதிய கொரொனா வைரஸ் பற்றி முழுமையாக முடிவுக்கு வர இன்னும் நீண்ட ஆய்வு தேவைப்படும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.


Leave a Reply