கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சி‌பி‌எஸ்‌இ தேர்வுகள் ஒத்தி வைப்பு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சிபிஎஸ்இ தேர்வில் நடப்பு மாதத்திற்கு பின் தள்ளி வைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

 

இந்தியாவில் கொரொனா வைரஸ் தாக்கத்தை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றை வரும் 31ம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

 

முன்னதாக பத்தாம் வகுப்புக்கான சிபிஎஸ்சி தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி மார்ச் 20ஆம் தேதி வரையும், 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ல் தொடங்கி மார்ச் 30ஆம் தேதி வரையும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

 

இந்தநிலையில், இந்த தேர்வுகள் மார்ச் மாதத்திற்கு பின்னர் நடத்தப்படும் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் அந்த தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.


Leave a Reply