கொரோனா குறித்து வதந்தி பரப்புவோரின் கணக்குகள் முடக்கப்படும்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரோனா வைரஸ் குறித்து வதந்திகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரொனா வைரஸ் மிகவும் ஆபத்தானது ,குணப்படுத்த முடியாது, வைரஸ் தொற்று ஏற்பட்டால் இறப்பு நிச்சயம் என்ற வதந்திகளை பதிவிடு வோரின் பதிவுகள் அழிக்கப் படுவதுடன் அவர்களது கணக்கு முடக்கப்படும் என டுவிட்டர் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

மேலும் சிகிச்சை முறைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நோய்த் தொற்றுக்கான மருந்து கண்டறியும் குறிப்புகள் குறித்த பதிவுகள் இருந்தால் ஊக்குவிக்கப்படும் என்றும் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Leave a Reply