மதுரையில் ‘கொரோனா தனிமை முகாம்’…? வதந்தி!
மதுரையில் கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்த முகாம் அமைக்கப்படுவதாக சமூகவலைதளத்தில் வதந்தி பரப்பிய செல்வம் என்பவர் கைது செய்யப்பட்டார். கொரொனா பாதித்த 47 பேரை மதுரை மாவட்ட புறநகரான ராஜாகூர் பகுதியில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருவதாகவும் இதனை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடப்பதாகவும் சமூகவலைதளத்தில் திங்களன்று வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இதுகுறித்து ராஜாகூர் கிராம நிர்வாக அலுவலர் ஆண்டாள் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மதுரை ஒத்தக்கடை காவல்துறையினர் வீடியோவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ராஜகூரை சேர்ந்த செல்வம் என்பவர் அந்த வீடியோ பதிவை பகிர்ந்தது தெரியவந்ததையடுத்து இணையதளத்தில் வதந்தியை பரப்புதல், காட்சிகளை பதிவேற்றம் செய்தல் மற்றும் போலியான தகவலை மற்றவருக்கு பகிர்தல் ஆகிய 3 பிரிவுகளில் செல்வம் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் புது தாமரைப்பட்டியில் இன்று அதிகாலை கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




