ஜி.கே.வாசன், திருச்சி சிவா, தம்பிதுரை, கே.பி முனுசாமி, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர் இளங்கோ… ராஜ்யசபா எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வு!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


தமிழகத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு ஜி.கே வாசன், திருச்சி சிவா உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் அடுத்த மாதம் 2-ம் தேதியுடன் 6 ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து, இந்த 6 இடங்களுக்கு வரும் 26ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்த 6 இடங்களுக்கு திமுக சார்பில் திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ ஆகியோரும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி, மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் கூட்டணியில் தமாகா தலைவர் ஜி.கே வாசன் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. கடந்த 6-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றது. திமுக, அதிமுக தரப்பில் தலா 3 பேருடன் மூன்று சுயேட்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

 

இந்நிலையில்,கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற பரிசீலனையில் மூன்று சுயேட்ச்சைகளின் வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. எனவே வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில், திமுக சார்பில் போட்டியிட்ட மூன்று பேரும், அதிமுக தரப்பில் போட்டியிட்ட மூன்று பேரும் ராஜ்யசபா எம்பிக்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த 6 பேருக்கும் இன்றே வெற்றி பெற்றதற்கான சான்றிதழும் வழங்கப்படும் என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.


Leave a Reply