பள்ளிக்கு வராத மாணவியை ஆபாசமாக திட்டிய ஆசிரியர்!
ஈரோடு அருகே பள்ளிக்கு வராத மாணவியிடம் ஆசிரியர் ஆபாசமாக பேசியதாக கூறி பெற்றோர் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிஎன் பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் ஒரு மாணவி உடல்நிலை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பள்ளிக்கு வராமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இதனால் அவரை ஆசிரியர் ஆனந்த் என்பவர் தரக்குறைவாக ஆபாசமாக பேசி வீட்டிற்கு திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள் பள்ளிக்கு முன்பு திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆசிரியரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அங்கு வந்த போலீசார் ஆனந்தனை அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




