1 ரூபாய்க்கு பிரியாணி! ஹோட்டலில் குவிந்த அசைவ பிரியர்கள்
திருவள்ளூரில் வாட்ஸ்அப் வதந்திகளை தவிடு பொடியாக்கும் வகையில் ஒரே நேரத்தில் பலர் பிரியாணி சாப்பிட குழு நிகழ்வு அரங்கேற்றியது. பொன்னேரியில் தனியார் உணவகம் திறப்பு விழாவையொட்டி ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டது.
காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை 1 ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என்ற தகவல் அறிந்து சிறியவர் முதல் பெரியவர் வரை ஏராளமானோர் உணவகம் திறப்பு விழாவிற்கு திரண்டனர். ஒரே நேரத்தில் குவிந்த இந்த அசைவ பிரியர்களால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சமீப நாட்களாக கோழிக்கறி உண்பதால் கொரானா வைரஸ் பரவ கூடும் என பீதியைக் கிளப்பி வரும் வதந்திகளை தவிடு பொடியாக்கும் வகையில் 500க்கும் மேற்பட்டோர் போட்டிபோட்டுக்கொண்டு பிரியாணியை உட்கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




