மதுரை சாலை விபத்தில் சிக்கி இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் பலியான விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து விளக்க போக்குவரத்து போலீசார் சிசிடிவி காட்சியை வெளியிட்டுள்ளனர். வில்லாபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 ஆம் ஆண்டு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கார்த்திகேயன் மாநகராட்சி குப்பை லாரி மோதி உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியாகியிருந்தது.
ஆனால் விசாரணையில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஷேர் ஆட்டோ மீது மோதாமல் இருக்க பிளாட்பாரத்தில் ஏறி இறங்கியபோது மாணவர் கார்த்திகேயன் விபத்தில் சிக்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. கல்லூரி மாணவரின் உயிர்பறிப்புக்கு ஷேர் ஆட்டோ டிரைவரின் அஜாக்கிரதையே காரணம் என்று தெரிய வந்துள்ளது.
இந்த சிசிடிவி காட்சி மூலம் ஷேர் ஆட்டோ டிரைவர் மீது வழக்கு பதிவு செய்த மதுரை போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.