--- --:--:-- --

எல்‌கே‌ஜி சீட்டுக்காக இரவில் பள்ளியின் முன்பு கொசுக்கடியில் படுத்த பெற்றோர்கள்

11

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே தனியார் பள்ளியில் எல்கேஜி சேர்க்கைக்காக விடிய விடிய பெற்றோர்கள் பள்ளி வளாகத்திலேயே காத்திருந்தனர். கிளாம்பாக்கத்தில் ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது.

 

வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான கடிதம் இன்று காலை 9 மணி முதல் பெறப்படும் என பள்ளியின் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதனை முன்னிட்டு நேற்று மாலை முதலே பெற்றோர்கள் பள்ளிக்கு வர தொடங்கிய நிலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கொசுக்கடி என எதனையும் பொருட்படுத்தாமல் பள்ளியின் வளாகத்திலேயே காத்திருந்தனர்.

 

இப்பள்ளியில் எல்கேஜி வகுப்பிற்கு மொத்தம் 80 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில் 200க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon