கொரொனா அச்சத்துடன் ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள் உணவு, தங்குமிடம் இன்றி தவிப்பதாகவும் தங்களை இந்திய அரசு மீட்க வேண்டும் என்றும் கோரி மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
ஈரான் நாட்டுக்கு மீன்பிடிக்க சென்ற கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் தங்களை அங்கிருந்து மீட்கும்படி சில தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் சில வீடியோக்களை வெளியிட்டு உள்ள மீனவர்கள் உண்ண உணவு இன்றியும், தங்க இடம் இன்றியும் தவித்து வருவதாகவும் ஈரான் முதலாளிகள் தங்களை கண்டுகொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். எனவே இந்திய அரசும், தமிழக அரசும் தங்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.