--- --:--:-- --

பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை தற்காலிகமாக நிறுத்தம்

6

கொரொனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை மார்ச் 31 வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள் பயோமெட்ரிக் கருவியில் வருகையை பதிவு செய்ய தேவையில்லை என்றும், வருகை பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளுமாறு பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

 

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் உரிய அறிவுறுத்தலை வழங்குமாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நிலைமையின் தீவிரத்தை பொருத்து இது மேலும் சில நாட்கள் நீடிக்க வாய்ப்புள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon