கொரானா பற்றி அச்சப்பட வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள்
சீனாவில் இருந்து கேரளா திரும்பிய 3 பேர் கொரொனா பாதிப்புக்கு உட்பட்டு தீவிர சிகிச்சைக்கு பிறகு அண்மையில் பூரண நலம் பெற்று வீடு திரும்பினர். இந்நிலையில், நேற்று மூன்று வெவ்வேறு மாநிலங்களில் இத்தாலி நாட்டவர் உட்பட 3 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் கொரொனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பதவியில் கோபிட்டின் 90 என்று அழைக்கப்படும் ஒரு வகைகொரொனா வைரஸ் பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறைகளில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் கொரொனா அறிகுறி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் கொரொனா அறிகுறி பரிசோதனைகளில் மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட பல்வேறு துறையினரும் ஒருங்கிணைந்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே கொரொனா வைரஸ் பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். நாம் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதோடு அவரவர் சுய சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் சில முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
எவ்வாறெனில் அடிக்கடி கைகளை கழுவுவது, ஒருவர் மற்றொருவருடன் பேசும்போது நெருக்கமாக நின்று பேசாமல் குறைந்தபட்சம் நல்ல இடைவெளியில் நின்று பேசுவது, ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் ஒவ்வொருவரும் தங்கள் கண்கள், மூக்கு, வாய் ஆகியவற்றை அடிக்கடி தொடுவதை தவிர்ப்பது என்பது கொரொனாவில் இருந்து தப்பிப்பதற்கான மற்றொரு வழிமுறை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




