--- --:--:-- --

“எல்லை தாண்டினால் தொடர் முழுவதும் சஸ்பெண்ட்!!” எம்பிக்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை!!

12028a1d-6b08-499a-a058-2238f41ca9d0

மக்களவையில் எம்பிகள் தங்கள் இருக்கையிலிருந்து எதிர் வரிசைக்கு சென்று பிரச்சினை செய்தால் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு நேற்று தொடங்கியது. நேற்று மக்களவை மற்றும் மாநிலங்களவை நிகழ்ச்சிகள் தொடங்கிய உடனே இரு அவைகளிலும் கடும் கூச்சல், அமளி ஏற்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், டெல்லி வன்முறை தொடர்பாகவும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். சபையை ஒத்தி வைத்து இந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டுமென சபையின் நடுவே நடுப்பகுதிக்கு சென்று எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்தி ஒத்தி வைக்கப்பட்டன. பின்னர் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.

 

மக்களவையில் நேற்று நட ந்த அமளியின் போது காங்கிரஸ் மட்டும் பாஜகவைச் சேர்ந்த இரு பெண் எம்பிக்கள் ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு மோதிக் கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையானது. இருவருமே தங்கள் தாக்கப்பட்டதாக சபாநாயகரிடம் புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்றும் மக்களவை கூறியவுடன் பிரச்சனை வெடித்ததை தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியது.

 

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் இருக்கையை விட்டு எழுந்து அவையின் மையப்பகுதிக்கு வந்து கூச்சலில் ஈடுபட்டனர். அப்போது எம்.பி.க்களை கடுமையாக எச்சரித்த சபாநாயகர், எம்.பி.க்கள் யாராக இருந்தாலும் தங்கள் இருக்கையை விட்டு எழுந்து எதிர் வரிசையில் சென்று பிரச்னை செய்தால் தொடர் முழுவதும் சஸ்பென்ட் செய்யப்படுவார்கள் என எச்சரித்தார். ஆனாலும் அமளி தொடர்ந்ததால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதே போல் மாநிலங்களவையும் கூச்சல் குழப்பம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon