--- --:--:-- --

இராமநாதபுரம் தமிழ்ச் சங்கம் நடத்திய மகளிர் விழா!!

d5fb5278-1f18-47c4-81d9-0e5e5da975eb

இராமநாதபுரம் தமிழ் சங்கம் சார்பில் நடந்த மகளிர் விழாவுக்கு அக்குஹீலர் கவிதா விஸ்வநாதன், தலைமை வகித்தார். கவிதா செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சீதாலெட்சுமி சந்திரசேகரன் வரவேற்றார். தமிழிசை – ஷிவானி அக்ஷதா, தரணி போற்றும் பரணி -இளமதி பானுகோபன்,பண்ணும் பரதமும்-டாக்டர் கனகப்பிரியா பால்ராஜ்,குறளமுதம்-மழலை .மிரா ரஞ்சன், எட்டுத்தொகையில் ஏற்றமிகு மகளிர்-ஜெய்நபி ஜபருல்லாக்கான், நாட்டார் பாடலும் நடனமும்-அரசு குழந்தைகள் காப்பக மாணவியர் நடன நிகழ்ச்சி நடந்தது.

பாவையரின் பன்முகப் பார்வை என்ற தலைப்பில் தமிழரசி உதயகுமார், தமிழரசி மதியழகன்,விஜி கருணாநிதி, உமா மகேஸ்வரி மாரிமுத்து, கீதா ரமேஷ், பரமேஸ்வரி தமிழ்வாணன்,புதுமைப் பெண்களடி ,பூமிக்குக் கண்களடி என்ற தலைப்பில் கலைவாணி பேசினர். டாக்டர் . மதுரம் அரவிந்தராஜ், மகளிர் அணித்தலைவி ,கஸ்தூரி முருகேசன், காளீஸ்வரி சுகுமார். கௌசல்யா ஜெகநாதன், லதா சேஷாத்ரி, சித்ரா வணங்காமுடி, ஆடலும் பாடலும் – மகேஸ்வரி தங்கப்பாண்டியன், எம்.எஸ்.கே . ஹரிதா ராகேஷ்குமார், பெண்மை போற்றுதும் – விருதுகள் வழங்கிப் பாராட்டு, தஹ்மிதா பானு மங்களேஸ்வரி மங்களசுந்தரமூர்த்திநன்றி கூறினார்.

 

நிகழ்ச்சியை பரமேஸ்வரி தமிழ்வாணன், இளமதி பானுகோபன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon