மறைந்த குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் உடலுக்கு, ஸ்டாலின் நேரில் அஞ்சலி

மறைந்த குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் உடலுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். திமுக எம்எல்ஏ காத்தவராயன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.

 

இந்த நிலையில் காத்தவராயன் உடல் நேற்று சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதனிடையே இன்று காலை பேரணாம்பட்டு வந்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் காத்தவராயன் உடலுக்கு மாலை அணிவித்து நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்பு இறுதி ஊர்வலத்திலும் அவர் பங்கேற்றார்.

 

இதனையடுத்து காத்தவராயன் உடல் பேரணாம்பட்டு இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.


Leave a Reply