ராமநாதபுரம் மாவட்டம் இத்திஹாத்துல் நவ்ஜஹான் முஸ்லிம் சங்கம் (ஐ என் எம் எஸ்) சார்பில் 31-ம் ஆண்டு தென் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி பெருங்குளம் கால்பந்தாட்ட மைதானத்தில் தொடங்கியது.
தொடக்க விழாவுக்கு பெருங்குளம் முஸ்லிம் ஜமாத் கவுரவத் தலைவர் சாகுல்ஹமீது தலைமை வகித்தார். பெருங்குளம் ஊராட்சி தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். முதல் போட்டியை ராமேஸ்வரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் துவக்கி வைத்தார்.
பெருங்குளம் கிழக்கு தெரு தலைவர் நாகசுந்தரம், மேற்கு தெரு தலைவர் கருப்பையா, ஜமாத் தலைவர் அப்துல் நாபிஃ ஊ, உதவி தலைவர் நல்ல மீரான் கனி, செயலர் அப்துல் சுபஹான், பொருளாளர் செய்யது யாசீர் அலி, ஐஎன்எம்எஸ் சங்க தலைவர் இஸ்மாயில் கனி, துணை தலைவர் சுபுஹத்துல்லா, செயலர் அப்துல் ஹலீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோட்டைபட்டினம், சிவகங்கை,கானாடுகாத்தான்,கழனிவாசல்,இளையான்குடி, பண்ணக்கரை,கீழக்கரை,பெரியபட்டணம், மண்டபம், பெருங்குளம் உள்பட 28 அணிகள் கலந்து கொள்கின்றன. மார்ச் 5-ல்காலிறுதி , 6-ந் தேதி அரையிறுதி, மார்ச் 8-ல் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.