--- --:--:-- --

ரஜினியிடம் கேள்வி கேட்ட இளைஞர் பைக் திருட்டு வழக்கில் கைது

1

தூத்துக்குடி மாவட்டம் தென்பாகம் அருகே இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டதாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சாம் குமார் என்பவரின் இருசக்கர வாகனம் கடந்த 20ஆம் தேதி காணாமல் போனது.

 

அது குறித்த விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ், மணி, சரவணன் ஆகியோர் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. மூவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களின் பின்னணி குறித்து விசாரணை நடத்தினர். இதில் சந்தோஷ் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது காயமடைந்து சிகிச்சை பெற்றவர் என்றும், அப்போது நடிகர் ரஜினிகாந்தை நீங்கள் யார் எனக் கேட்டவர் என்பதும் தெரியவந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon