நெடுஞ்சாலையில் தாறுமாறாக திரும்பிய கண்டெய்னர் லாரி
பிரிட்டனில் அதிவேக வாகனங்கள் செல்லும் நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரியை அபாயகரமான முறையில் திருப்பிக் கொண்டு சென்ற டிரைவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஸிடெஃபோசீட் பகுதியில் கண்டெய்னர் லாரி ஒன்று போக்குவரத்து இல்லாத நெடுஞ்சாலையில் அனாயசமாக திரும்பி வந்தது.
பிறகு போக்குவரத்து அதிகமுள்ள நெடுஞ்சாலையில் அபாயகரமான முறையில் வளைந்து திரும்பி சென்றது. சிசிடிவி காட்சியை அடிப்படையாகக் கொண்டு லாரி டிரைவரை உடனடியாக போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் டிரைவருக்கு 6 மாதம் சிறை தண்டனையும், 15 மாதங்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




