கொல்கத்தா விமான நிலையத்தில் நெஞ்சு வலியால் மயங்கி விழுந்த பயணியை பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் முதலுதவி அளித்து காப்பாற்றினார். கொல்கத்தாவில் இருந்து பாதுர்கா செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த ஒரு பயணி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பார்த்தா என்பவர் மயங்கி விழுந்த பயணியை சோதித்து பார்த்ததில் மூச்சு நிலையாக இல்லாததை அறிந்து மற்றொரு வீரரின் உதவியுடன் முதலுதவி அளித்துள்ளார்.
இதையடுத்து மயங்கி கிடந்த அவர் சுயநினைவுக்கு திரும்பியுள்ளார். விரைந்து செயல்பட்டு முதலுதவி அளித்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
ஹரியானா தேர்தலில் பாஜக வெற்றி : பாரிவேந்தர் வாழ்த்து
வினேஷ் போகத்துக்கு இனி அழிவுதான்..கொக்கரித்த பாஜக..!
இந்திய அஞ்சல் துறை சார்பில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவை முன்னிட்டு ஆதார் சிறப்பு முகாம்..!
ஹரியானாவில் பாஜக 45 தொகுதிகளில் முன்னிலை..!
கடனை திருப்பி கேட்டவரின் 6 வயது மகளை கொலை செய்த கொடூர கும்பல்..!
மகளிருக்கு மாதம் ரூ.2,100 உதவித்தொகை: பாஜக