மேட்டூர் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழையில்லாததால் , மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது .நேற்று முன்தினம் விநாடிக்கு 115 கன அடியாக இருந்த நீர்வ ரத்து நேற்று 2வது நாளாக அதே அளவில் நீடித்து வருகிறது.
டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப் பட்டுள்ள நிலையில்,குடிநீர் தேவைக்கு மட்டும் அணை யில் இருந்து 1250 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது . வரத்தை காட்டி லும் நீர்திறப்பு அதிகளவில் உள்ளதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது .
நேற்று முன்தினம் 107 . 21 அடியாக இருந்த நீர்மட்டம் , நேற்று காலை நிலவரப்படி 107.12 அடியாக சரிந்தது .நீர் இருப்பு 74.37 டிஎம்சியாக உள்ளது . அதே போல் ஒகேனக்கல் காவிரி யில் நீர் வரத்து தொடர்ந்து 6வது நாளாக விநாடிக்கு 600 கன அடியாக நீடித்து வருகிறது.