ஆதிச்சநல்லூரில் தொல்பொருள் அருங்காட்சியகம்..! மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு!!

மத்திய அரசின் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

 

இதில் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில், தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு சுற்றுலா மையமாக்கப்படும் என அறிவித்தார்.

 

மேலும் சுற்றுலா துறை மேம்பாட்டுக்கு ரூபாய் 2500 கோடி ஒதுக்கப்படும் எனவும் அறிவித்தார்.

 

சுற்றுச்சூழலை அதிக மாசுபடுத்தும் அனல் மின் நிலையங்கள் மூடப்படும். சுற்றுச்சூழலை பாதுகாக்க காற்று, மாசை கட்டுப்படுத்த, ரூபாய் 44 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவித்தார்.

 

அரசுப் பணியாளர் தேர்வு முறையில் சீர் திருத்தங்கள் கொண்டு வரப்படும் எனவும் தொடக்கநிலை அரசு பணியாளர்களை தேர்வு செய்ய தேசிய பணியாளர் தேர்வு முகமை அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

 

அரசு பணியாளர்களை தேர்வு செய்ய நாடு முழுவதும் பொதுவான தேர்வு நடத்தப்படும் என்றும், அரசு பணியாளர்களை ஆன்லைன் தேர்வு முறை மூலம் தேர்வு செய்ய தனி அமைப்பு ஏற்படுத்தப்படும் எனவும் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.


Leave a Reply