எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு ..! பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு !!

நாட்டின் பழமையான காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய பட்ஜெட்டில் நீதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

 

2020-2021-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் :

 

ஜம்மு காஷ்மீர் வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ. 30 ஆயிரத்து 757 கோடியும் லடாக்கிற்கு ரூ. 5958 கோடியும் ஒதுக்கப்படும்

 

வங்கி டெபாசிட் காப்பீடு ரூ.ஒரு லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும். வங்கிகல் திவாலானால் வைப்புத் தொகையில் அதிகபட்சமாக 5 லட்சம் கிடைக்கும்.

 

எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பங்குச்சந்தையில் எல்ஐசி நிறுவன பங்குகள் பட்டியலிடப்படும்

 

ஐடிபிஐ வங்கி பங்குகளை விற்று நிதி திரட்டவும் மத்திய அரசு நடவடிக்கை

 

பங்குச் சந்தையில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் உச்சவரம்பு 15 சதவீதமாக அதிகரிக்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.


Leave a Reply